வணக்கம்,

வியாபாரத்தின் வளர்ச்சிக்கு அத்திவாரமே விளம்பரம் தான். அந்த விளம்பரத் துறைக்கு உறுதுணையாகவும்,
ஒரு வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாள் கனவிலும் எண்ணத்திலும் உருவானதுதான் இந்த “தமிழர் மையம்” (Tamil’s Point). கால ஓட்டத்திற்கு ஏற்ப, இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியை முழுமையாக உள்வாங்கி, அனைத்து வயதுப் பிரிவினருக்கும் பயன்படும் வகையில் இந்த “Tamil’s Point” தளத்தை ஒரு செயலியாகவும் (App), ​இணையத்தளமாகவும் (Website) மற்றும் புத்தகமாகவும் உங்கள் கைகளில் சமர்ப்பிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

உலகெங்கும் உள்ள தமிழர் வியாபார நிறுவனங்கள் அனைத்தும், உங்கள் கைத்தொலைபேசியில் மற்றும் கணினியில் ஒரே ஒரு விரல் அசைவில் கிடைக்க வேண்டும் என்ற ஆழமான தூர நோக்குடன் இந்த செயலியை (App) மற்றும் இணையதளத்தை (Website) நான் வடிவமைத்துள்ளேன். இதன் முதல் கட்டமாக, சுவிட்சர்லாந்தில் ஆரம்பித்து, உலகம் முழுவதும் இருக்கும் அனைத்துத் தமிழ் நிறுவனங்களையும் ஒன்றிணைப்பதே எனது முதன்மை இலக்காகும். இதன் மூலம் உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் வாடிக்கையாளர்களையும், நிறுவனங்களையும் ஒரே புள்ளியில் இணைக்க நான் ஆசைப்படுகிறேன். அத்தோடு, உலக அளவில் தமிழர் வியாபாரத்தை மேம்படுத்துவதே எனது நோக்கம். இது நம் தமிழர்களின் ஒற்றுமையை உலகிற்குப் பறைசாற்றும் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை.

இந்த “Tamil’s Point” புத்தக வடிவம், சுவிட்சர்லாந்தில் உள்ள அதிக தமிழ் நிறுவனங்களின் விபரங்களையும் உள்ளடக்கி என்னால் உருவாக்கப்பட்டுள்ளது. சுவிஸில் உள்ள அனைத்துத் தமிழ் மக்களையும் இது சென்றடைய வேண்டும் என்பதற்காக, இதனைத் தபால் மூலம் உங்கள் வீடுகளுக்கே நேரடியாக அனுப்பி வைக்கிறேன்.

இந்த “தமிழர் மையத்தை” (Tamil’s Point) மிகச் சிறப்பாக வெளியுலகிற்குக் கொண்டுவர எனக்குப் பல வழிகளில் பக்கபலமாக இருந்து, உதவி செய்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

நன்றி
என்றும் நன்றியுடன்
​சுப்பிரமணியம் மகினன்

Welcome,

Advertising is the ultimate foundation for the growth of any business. Born from my long-held dream and aspiration to support and guide the advertising industry, I present to you “Tamil’s Point”. Keeping pace with the times and fully embracing today’s technological advancements, I am immensely proud to present “Tamil’s Point” in your hands as a Mobile App, a Website, and a printed Book designed to benefit people of all generations.

I have designed this app and website with a deep, forward-looking vision: to make Tamil business enterprises from all over the world accessible on your smartphone and computer with just a single touch. As a first step, starting here in Switzerland, my primary goal is to bring together Tamil businesses worldwide. Through this, I wish to connect Tamil-speaking consumers and businesses across the globe under one single roof. Furthermore, my core objective is to elevate Tamil businesses on a global scale. I have absolutely no doubt that this will proudly showcase the unity of Tamils to the entire world.

The print edition of “Tamil’s Point” has been carefully crafted by me, compiling detailed information on a vast majority of Tamil businesses in Switzerland. To ensure it reaches every Tamil household in Switzerland, I am sending it directly to your doorstep via mail.

I extend my heartfelt gratitude to all the good souls who stood by me in many ways and helped me bring this “Tamil’s Point” to the world in such an excellent manner!

Thank you.

With warm regards,

Subramaniam Makinan

We work for

Insuring your future

There are many variations of pass of lorem sum available but the majority have suffered alteration in some form. Injected humour randomised words which.
6805
Project Completed
9760
Happy customers
Professional Consultant

Meet Our Experts

Tamil's Point

Let’s find anything around you

A curated collection of stays and experiences to inspire your next trips.